ஈஸ்டர் தாக்குதல்:மூவரடங்கிய விசாரணை குழு தயார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை நடத்துவதற்காக மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதி தமித்த தொட்டவத்த தலைமையில் இந்த நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிபதிகளான அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் இந்த நீதிபதிகள் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த நீதிபதிகள் குழு, பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டுள்ளது

You May also like