மருத்துவர் முன் விழுந்த 25 வயது இளைஞன் மரணம்:கண்டியில் சம்பவம்!

கொரோனா தொற்றுக்கு உள்ளான 25 வயது இளைஞன் மருத்துவமனை முன்பாக விழுந்து உயிரிழந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

கண்டி குண்டசாலை மஹமெவ்னா என்ற பிரதேசத்தில் உள்ள கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு இடிப்பு வலி காரணமாக பரிசோதனை செய்துகொள்ள சென்ற இளைஞன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பின்னர் நடாத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கண்டி கட்டுகஸ்தோட்டையை சேர்ந்தவராக கூறப்படுகிறது.

You May also like