சிறையில் ரிஷாட்டிடம் இருந்து தொலைபேசி மீட்பு!

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு மகசின் சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் இருந்து தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மகசின் சிறையின் பிரதான சிறை அதிகாரி மற்றும் இன்னொமொரு அதிகாரி ரிஷாட்டின் சிறைக் கூடத்திற்கு சென்றபோது அவர் தொலைபேசியை தூக்கியேறிந்தார் என்றும் ஆணையாளர் கூறினார்.

தற்போது மேலதிக விசாரணைக்கு தொலைபேசி புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May also like