கேஸ்,எரிபொருள் முடிந்து இப்போது சீனிக்காக காத்திருக்கும் மக்கள் (PHOTOS)

இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் சதொசயில் விற்பனை செய்யப்படும் சீனியை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், மலையகத்திலும் இவ்வாறான நிலைமையே காணப்பட்டது. அட்டன் நகரிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சீனியை கொள்வனவு செய்து கொண்டனர்.

அமைச்சர் லசந்த அழகியவண்ண வெளியிட்ட தகவலை அடுத்து சதொசயில் சீனியின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி, தற்போது 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ சீனி மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனை பெற்றுக் கொள்வதற்கு சதொச நிறுவனங்களுக்க முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக சில சதொச நிறுவனங்களில் சீனி நிறைவடைந்துள்ளமையினால் மக்களால் கொள்வனவு செய்ய முடியாமல் வீடு திரும்ப நேரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May also like