தமிழ் ஊடகரின் உயிரை பறித்த கோவிட்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஐந்து தினங்களாக தனக்கு தலைவலி இருமல், காய்ச்சல் காணப்பட்டதை அடுத்து, தான் நேற்று (01) அன்டிஜன் பரிசோதனை செய்ததாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவொன்றை வெளியிட்டார்.

இந்த பரிசோதனையில் தனக்கு கொவிட் தொற்று உறுதியாகியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

”குணமடைந்த பின்னர் தடையின்றி, எனது பணிகள் தொடரும்… அதுவரை காத்திருங்கள்” என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, வைத்தியசாலைக்கு சென்ற பிரகாஷ் ஞானபிரகாசம், இறையடி எய்தினார்.

 

You May also like