28 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனாவுக்கு பலி

இலங்கையில் இதுவரை 28 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே வைத்தியர்கள், தாதியர்கள், இராணுவம் என பொது சேவையில் ஈடுபடும் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like