மேலும் 4 மில்லியன் சீனத் தடுப்பூசி இலங்கைக்கு!

இலங்கைக்கு சீனாவிடத்தில் இருந்து மேலும் 04 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி நாளை கிடைக்கவுள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகம் இதனை தெரிவிக்கின்றது.

இந்நிலையில் இலங்கைக்கு இதுவரை கிடைத்த சீனத் தடுப்பூசி தொகையில் ஒரே நேரத்தில் கிடைக்கும் அதிகூடிய தடுப்பூசி தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

You May also like