அவிஷ்கவின் பந்தில் காயமடைந்த பவுமாவுக்கு ஏற்பட்ட கதி

இலங்கை கிரிக்கெட் அணியுனான அடுத்துவரும் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டுவன்டி டுவன்டி போட்டிகளில் பங்கேற்கின்ற வாய்ப்பை தென்னாபிரிக்க அணி தலைவர் டெம்பா பவுமா இழந்துள்ளார்.

கொழும்பு ஆர் பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த முதலாவது போட்டியில் அவிஷ்க எரிந்த பந்து பவுமாவின் கட்டைவிரவில் மோதி காயத்தை ஏற்படுத்தியது.

அதற்கு முன் அவிஷ்க துடுப்பெடுத்தாடிய சந்தர்ப்பத்தில் பவுமா எறிந்த பந்து அவிஷ்கவின் மீது மோதி அவர் கீழே சுருண்டு விழுந்த சம்பவமும் ஏற்பட்டது.

இந்நிலையில் விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக பவுமா இந்தத் தொடரிலிருந்து ஓய்வுபெறவுள்ள அதேவேளை தென்னாபிரிக்க அணியின் தற்காலிகத் தலைவராக கேஷாவ் மஹராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like