பிரிகேடியரின் உயிரையும் பறித்தது கோவிட்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இராணுவ பிரிகேடியர் டி. உதயசேன சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இவர் கோவிட் மற்றும் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு கொத்தலாவல இராணுவப் பாதுகாப்புக் கல்லூரியின் மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

உயிரிழக்கும்போது இவருக்கு 53 வயதாகும். கொழும்பின் புறநகராகிய மாலபே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார்.

கடந்த 31 வருடங்காளக இவர் இலங்கை இராணுவத்தில் சேவையில் இருந்துள்ளார்

You May also like