கண்டி மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் பேரை நெருங்கும் ஆபத்து?

கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் முதலாவது டோஸினைப் பெற்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்று ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

இதன்படி ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது டோஸினை ஒரு இலட்சத்து 22000 பேர் வரை உள்ளனர். அவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரண்டாவது டோஸ் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொற்று அவர்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளதென்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசாங்கம் விரைந்து அவர்களுக்கான இரண்டாம் கட்டத் தடுப்பூசி ஏற்பாட்டினை செய்யும்படியும் அவர் இன்று வேண்டுகோள் விடுத்தார்.

You May also like