பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி

மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற கொரோனா ஒழிப்பு குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் 18 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கையை அடுத்த 02 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியேற்றும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சுகாதார தரப்பு, பாதுகாப்பு தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

You May also like