இலங்கையில் இருந்து சிலர் ஊடுறுவ வாய்ப்பு-இந்தியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு நுழைய சந்தர்ப்பங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில புலனாய்வுப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது.

இதனைத்தொடர்ந்து கேரள மாநிலம் மற்றும் கடற்கரையோரப் பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, கடல்வழியாக கர்நாடகாவின் அலபுல்லா மாவட்டத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையிலிருந்து பிரவேசிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

You May also like