மஹிந்த 03 தடவை தனிமைப்படுத்தலில்-பந்துலவுக்கு தொடரும் சிகிச்சை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரை மூன்று சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்று தெரியவருகிறது.

அதேபோல அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும 4 சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அமைச்சர் விமல் வீரவன்ச 03 தடவை தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

இதேவேளை வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தனவும் அவரது மனைவியும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவரது மகள் உட்பட 05 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

You May also like