இலங்கையரின் தாக்குதலை தொடர்ந்து நியூஸிலாந்து எடுக்கப்போகும் அதிரடி

நியூஸிலாந்தின் ஒக்லேன்ட்டிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிரான சட்டங்களைக் கடுமைப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

நியூஸிலாந்துப் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்ன் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையின் மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு நேற்று தாக்குதல் செய்திருந்ததாகவும், அவர் ஐ.எஸ் தீவிரவாதக் குழு மீதுஅதிகம் ஈர்க்கப்பட்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்திருந்தது.

சந்தேக நபர் நியூஸிலாந்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

You May also like