இனி கோவிட் ஏற்பட்டால் அனைவருக்கும் வீட்டிலிருந்தே சிகிச்சை

மேல் மாகாணத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சை அளிக்கும் முறைமையினை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்திற்கமைய, 14 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் வைத்திய மேற்பார்வையின் கீழ் வீடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்றுவரும் தொற்றாளர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்

You May also like