கண்டி மக்களுக்கு கலப்பு தடுப்பூசி

ஸ்புட்னிக்-V முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட கண்டி மாவட்ட மக்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் தொடர்பான தேசிய ஆலோசனை குழு இது தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May also like