இரண்டு முகக்கவசம் அணியுமாறு அரசாங்கம் கோரிக்கை

கொவிட்-19 தொற்று தற்போது வேகமாக பரவி வருவதனால், இயலுமானளவு பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்து வெளியே செல்கின்ற சந்தர்ப்பத்தில் பேஸ் ஷீல்ட் கவசம் ஒன்றை அணிவதும் மிக முக்கியம் என ஆரம்ப சுகாதார மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே  தெரிவித்தார்.

இதேவேளை, பொதுமக்கள் தடுப்பூசியின் வகையை பொருட்படுத்தாமல், நாட்டில் கிடைக்கின்ற ஏதாவது ஒரு வகையான தடுப்பூசியை, அருகிலுள்ள தடுப்பூசி நிலையம் ஒன்றிற்கு சென்று மிகவும் விரைவாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்

You May also like