அர்ஜுன மகேந்திரனுக்கு ஓய்வூதியம் அளிக்க அரசாங்கம் நடவடிக்கை?

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய வங்கியின் ஆளுநர்களாக பதவி வகித்தவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.

வங்கியின் முன்னாள் ஆளுநரான தற்போதைய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஓய்வூதிய கோரிக்கையை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கைக்கு அமையை ஓய்வூதியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அர்ஜுன மகேந்திரன் தற்போது தலைமறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like