கனடா நிராகரித்த சுமங்கலவை இத்தாலியும் ஏற்க மறுப்பு?

முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், இத்தாலிக்கான இலங்கைத் தூதவராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இத்தாலி அதற்கான எந்தவித பதிலையும் கடந்த 05 மாதங்களாக வழங்கவில்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்ட போதிலும் போர்க் குற்றச்சாட்டு உள்ளதால் கனேடிய அரசாங்கம் அவரை ஏற்க மறுத்துவிட்டது.

தொடர்ந்து அவர் கடந்த ஏப்ரலில் இத்தாலிக்கான தூதவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த நியமனம் குறித்து இத்தாலி அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.

You May also like