நாட்டில் உணவுப் பஞ்சம்? நிராகரிக்கின்றது அரசாங்கம்

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு தலைவிரித்தாடுவதாக அல் ஜஸீரா மற்றும் பி.பி.சி ஆகிய புகழ்பெற்ற சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்ற தகவல்களை நிராகரிப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

இலங்கைக்கு எதிராக சில சர்வதேச நாடுகள் சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றதாகவும் அவர் விமர்சித்தார்.

இதேவேளை இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவிவருவதாக ரொய்ட்டர்ஸ் ஊடகமும் கடந்த 03ஆம் திகதி  செய்தி பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like