ஜிப்ஸி சுனில் பெரேரா காலமானார்

இலங்கையின் முன்னணி இசை கலைஞரான சுனில் பெரேரா தனது 68வது வயதில் காலமானார்.

கொவிட் தொற்றுக்குள்ளான சுனில் பெரேரா, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், குணமடைந்துள்ளார்.

இவ்வாறு குணமடைந்த சுனில் பெரேரா, வீடு திரும்பிய நிலையில், சில தினங்களுக்கு பின்னர் மீண்டும் சுகயீனமுற்று ஓரிரு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சுனில் பெரேராவின் நிலைமை கவலைக்கிடமாக மாறியதை அடுத்து, அவர் நேற்றைய தினம் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று (06) அதிகாலை இறையடி எய்தினார்

You May also like