நாட்டின் கடனை செலுத்த தயாராகும் மன்னார்- இவ்வளவு அற்புதமா?

இலங்கையின் மன்னாரில் மறைந்திருக்கின்ற கனிய வளம் மற்றும் எரிபொருள் ஊடாக நாட்டின் கடன் சுமையின் மூன்று மடங்கிற்கும் அதிகமான இலாபப்பங்கை பெறமுடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த எரிசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

267 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கனிய வளமும், எரிபொருள் வளமும் உள்ளதாகவும், அவற்றை சரியான முறையில் முகாமை செய்யும்பட்சத்தில் அதிக இலாபத்தை இலங்கை அடையலாம் எனவும், அவற்றைப் பயன்படுத்தி நாட்டின் மொத்த கடன் சுமையையும் செலுத்திவிடவும் முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

எரிபொருள் மற்றும் கனிய வளங்களில் 50 வீதத்தை தனியார் துறைக்கு கொடுத்தாலும் அரசாங்கத்திற்கு 133.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

You May also like