இலங்கைக்கு வெற்றி!

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையணி கைப்பற்றியுள்ளது.

இன்று இடம்பெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கையணி 78 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களை மாத்திரம் இலங்கையணி பெற்றுக் கொண்டது.

இலங்கையின் துடுப்பாட்டத்தில் ச்சரித் அசலங்க மாத்திரம் அதிகூடிய 47 ஓட்டங்களை பெற்றார்.

தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் அணித் தலைவர் கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து 204 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்த தென்னாபிரிக்கா 30 ஓவர்களை மாத்திரம் எதிர்க் கொண்டு 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதன்படி 78 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இலங்கையின் பந்து வீச்சின் மகேஸ் தீக்சன அதிகூடிய 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகனாக துஸ்மந்த ச்சமிர தெரிவானார்.

தொடர் நாயகனாக ச்சரித் அசலங்க தெரிவானார்.

இந்த வெறிறியுடன் 8 வருடங்களின் பின்னர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கையணி கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

You May also like