அமைச்சு, எம்.பி பதவியிலிருந்து அஜித் நிவார்ட் இராஜினாமா?

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது அமைச்சுப் பதவியிலிருந்தும், தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கான அழைப்பும் அவருக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவே அறியமுடிகிறது.

மத்திய வங்கியின் ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ. டி லக்ஷ்மன் கடமையாற்றிவருகின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தில் அவருக்கு உயரிய பதவியொன்று காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வெகுவரைவில் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் மாற்றம் நிகழலாம் என்றே அரச தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

You May also like