ரணிலுக்கு Avant-Garde வண்டி நிறையக் கொடுத்த கோடிரூபாய்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடந்த காலகட்டத்தில் “Avant-Garde” நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தனவுக்கு கோடிக்கணக்கான பணத்தை அந்நிறுவனத்திற்குச் சொந்தமான நீலநிறத்திலான “Mazda” ரக வானில் அனுப்பப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக்கட்சியின் தொடர்பாடல் படையணியின் முன்னோடியும், அந்தக் கட்சியின் காலி – ஹிக்கடுவ நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜகத் ஆனந்த டி சில்வா எமது Tamil.Truenews.lk செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2015 ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் “Avant-Garde” நிறுவனத்தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தனவுக்குக் கோடிக்கணக்கான பணத்தை அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான “Mazda” ரக வானில் அனுப்பப்பட்டிருந்ததோடு பணம் அடங்கிய மூட்டைகள் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைமையகத்தில்தான் இறக்கப்பட்டன.

வஜிர அபேவர்தனவுடன் நானும் அந்த சந்தர்ப்பத்தில் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைமயகத்தில் இருந்ததோடு மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை வஜிர அபேவர்தனவே பெற்றுக்கொண்டிருந்தார். “Avant-Garde” நிறுவனத்திடமிருந்து வஜிர அபேவர்தன, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான ரணில் விக்கிகரமசிங்கவின் ஆசிர்வாதம், அனுமதி மற்றும் அனுசரணையுடன்தான் பெற்றுக்கொண்டிருந்தார் என்பதோடு, வஜிர அபேவர்தனவின் பணயக்கைதியாகவும் அவர் தற்சமயம் மாறியிருப்பதாகவும், அதனூடாக மோசடிமிகுந்த கொடுக்கல் வாங்கலின்  “Deal’ செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் “Avant-Garde” நிறுவனத்தின் பிரச்சினை ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்த நிறுவனம் மற்றும் அதன் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதியை காப்பாற்றுவதற்காக அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை மட்டுமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தனது பணயக்கைதியாக வஜிர அபேவர்தன பயன்படுத்தியிருந்தார் என்பதோடு திலக் மாரப்பன மற்றும் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியவர்களின் உதவியும் பெறப்பட்டிருந்தன –  என்றார்.

You May also like