முறையான திட்டம் இன்றேல் மாணவர்களுக்கும் கோவிட் பரவும்;ஹேமந்த ஹேரத்!

எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டை திறப்பதாயின், திட்டங்களை முன் கூட்டியே உருவாக்கி, அதனை பகிரங்கப்படுத்துவது பொருத்தமானதென பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இன்று (8)   இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

13ஆம் திகதி தொடக்கம் திறப்பதாயின் அன்றைய தினம் சமூக, பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய முறை குறித்து, அந்தந்த பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் திட்டமிட்டு அதனை பகிரங்கப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பகிரங்கப்படுத்தினால் நாட்டைத் திறப்பதற்கு தகுந்த சூழ்நிலை உள்ளதாக திருப்தியடையலாம் என்றார்.

இதேவேளை பாடசாலைகளை முறையான திட்டமின்றி திறந்தால் மாணவர்களுக்கும் கோவிட் தொற்று பரவலாம் என்று அவர் கூறினார்.

You May also like