களுபோவில பிரதிப் பணிப்பாளர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

கொழும்பு – களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்ஷான் பெல்லன தற்சமயம் தீவிர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றினால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் தொற்று உறுதியானதோடு சாதாரண வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை தீவிர சிகிச்சைப் பிரிவில் மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவர் ருக்ஷான் பெல்லன, அரச மருத்துவ சம்மேளனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like