நீர் கட்டணமும் உயர்கிறதா? அமைச்சர் இன்று வெளியிட்ட அறிவிப்பு

எந்த வகையிலும் நீர்க் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என்ற உறுதிமொழியை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

அத்தோடு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ள காலகட்டத்தில் நீர் கட்டணச் செலுத்த முடியாமல் போனவர்களுக்கு நீர்விநியோகத்தை துண்டிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

You May also like