ஐ.நாவுக்கு விக்கி அனுப்பிய அதிரடி கடிதம்!

இலங்கையில் அமுலுக்கு வந்துள்ள அவசர கால சட்டம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெஷலேவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த சட்டம் காரணமாக வட மாகாணத்தில் மேலும் சில காணிகளை அரசாங்கம் கபளீகரம் செய்ய முயற்சி இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்று திரளும் சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக இந்த சட்டம் அமைவதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

You May also like