இலங்கையில் தாக்குதல் நடத்த ஐ.ஸ் திட்டம்? கசிந்தது அதிர்ச்சி தகவல்

அண்மையில் நியூசிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய நபர் இலங்கையிலும் பயங்கரவாதத் தாக்குதலைத் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள நியூசிலாந்தைச் சேர்ந்தர்களை தாக்கவும் திட்டமிட்டிருந்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் 06 பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய முகமது ஆதில் சம்சுதீன், ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது. அவர் தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர் என்பது பின்னர் தெரியவந்தது.

அவரது முகநூல் பக்கத்தை ஆராய்ந்ததில் , இலங்கையில் உள்ள நியூசிலாந்து மக்களுக்கு பாடம் கற்பிக்க இதுபோன்ற ஒரு செயலை செய்ய வேண்டும் என்ற தீவிரவாத மனநிலை அவருக்கு இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.

எனினும், காத்தான்குடி பகுதியில் அவருடன் தொடர்பை பேணிவந்த வேறு குழுக்கள் இருக்கலாம் என நியூசிலாந்து பாதுகாப்பு பிரிவு எச்சரித்துள்ளது. நியூசிலாந்தில் நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு தங்களின் முழு ஆதரவை வழங்குவதாக இலங்கை தெரிவித்துள்ளது.

You May also like