அவசரகாலச் சட்டம் – மாயமாகிய 27 எம்.பிக்கள்:அரவிந்தகுமார் பல்ட்டி

அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் திடீரென அரச தரப்பிலிருந்த 27 முக்கியஸ்தர்கள் மாயமாகியமை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவர்களில் 09 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு 06 பேர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் அரச தரப்பு உறுப்பினரான கப்பில அத்துகோராள, வாக்கெடுப்பு முடிந்த பின்னரே சபா மண்டபத்திற்குள் பிரவேசித்திருக்கின்றார்.

அத்துரலியே ரத்தன தேரர், அமைச்சர் விமல் வீரவன்ச, எஸ். வியாழேந்திரன், ஏ.எல்.எம் அத்தாவுல்லா, விஜேதாஸ ராஜபக்ஷ, அஷோக்க பிரியந்த உள்ளிட்ட உறுப்பினர்கள் விவாதத்தின் பின் நடத்தப்படட வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கவில்லை.

எதிர்கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்குத் தாவிய முஸ்லிம் எம்.பிக்களாகிய அலிசப்ரி ரஹீம், பைஷல் காசிம், எம.எச்.எம். ஹாரிஸ், எம்.எஸ். தௌபிக், நஷீர் அஹமட் உள்ளிட்ட உறுப்பினர்களும் வாக்கெடுப்பில பங்கேற்கவில்லை.

எவ்வாறாயினும் எதிர்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய அரவிந்தகுமார், இஷாக் ரஹ்மான், எம். முஷாரப் உள்ளிட்டவர்கள் இந்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like