தடுப்பூசி பெறாமல் அட்டை மட்டும் பெற முயற்சித்த நால்வர் கைது

தடுப்பூசி நிலையத்திற்கு வந்து தடுப்பூசியைப் பெறாமல் பதிவுசெய்யப்பட்ட தடுப்பூசி அட்டைகளை மாத்திரம் பெறமுயற்சித்த பெண்கள் மூவர் ஒட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்றிருக்கின்றது.

காலி – சங்கமித்தா வித்தியாலயத்தில் தடுப்பூசி நிலையம் உள்ளது. அங்கு சென்ற குறித்த சந்தேக நபர்கள், தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் அதுசார்ந்துவழங்கப்படுகின்ற தடுப்பூசி அட்டைகளை மாத்திரம் பெற முயற்சித்த நிலையில் காலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

You May also like