இந்தியா போன்று விறகு வைத்து கோவிட் உடல்களை தகனம் செய்ய யோசனை?

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கின்ற நபர்களின் உடல்களை விறகுகள் பயன்படுத்தி தகனம் செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதியை வழங்க முடியாதென யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர், மாவட்ட கொரோனா ஒழிப்புக் குழுவிடம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்படகின்றது.

யாழ்ப்பாணம் உள்ளிட் வடமாகாணத்தில் கோவிட் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

உடல் தகனம் செய்வதற்கான நிலையம் தொடரந்து இயங்கிவருவதால் மேலதிக உடல்களை அங்கு தகனம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

அதனால் இந்தியாவில் மேற்கொண்டதைப் போல விறகுகளைப் பயன்படுத்தி கோவிட் உடல்களை தகனம் செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

You May also like