மீண்டும் கேஸ் விலை அதிகரிப்பா? மீண்டும் தட்டுப்பாடு ஏற்படலாம்?

மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க அனுமதி கோரி லாப்ஸ் நிறுவனம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ கிராம் எடைகொண்ட கேஸ் சிலிண்டரின் விலையை 291 ரூபாவில் அதிகரிக்க வேண்டும் என்பதே லாப்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையாக காணப்படுகின்றது.

இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதியளித்தால் லாப்ஸ் சிலிண்டரின் புதிய விலையாக 2147 ரூபா காணப்படும்.

எவ்வாறாயினும் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை கடந்த மாதத்தில்தான்  363ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மிகவிரைலில் கேஸ் சிலிண்டருக்கான தட்டுப்பாடு மீண்டும் ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.

You May also like