ஒரே பிரசவத்தில் ஹெட்றிக்- ஆனால் தாய்க்கு கொரோனா

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் மூன்றுக் குழந்தைகளை பிரவசித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளது.

கொழும்பு சொய்ஸா மருத்துவமனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

27 வயதான குறித்த பெண், மூன்று குழந்தைகளை பிரவசித்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தாயும், குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர். எனினும் குழந்தைகளுக்குத் தொற்று இருக்கின்றதா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

You May also like