மத்திய வங்கி ஆளுநர் இன்று அல்லது இரு தினங்களில் இராஜினாமா?

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இன்று அல்லது இன்னும் ஓரிரு தினத்தில் இராஜினாமா செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப தயாராகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தில் உயர் பதவி ஒன்று அவருக்கு அளிக்கப்படவுள்ளது என்று கூறப்படுகிறது.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

அதற்காக அவர் அடுத்த வாரத்தில் பதவியை இராஜினாமா செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like