மஹிந்த இத்தாலி செல்லுமுன் கோட்டா-பஷில் இடையே அவசர சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இத்தாலிக்கு செல்ல முன் நேற்று இரவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.

இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதில் பங்கேற்கவில்லை என்றே தெரியவருகிறது.

ஜனாதிபதி தலைமையில் நடந்த இந்த சந்திப்பில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாக மேலும் கூறப்படுகிறது.

You May also like