மாலைதீவுக்கு மணல் கடத்தல்;விசாரணை ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுமதி மற்றும் கொண்டுசெல்லும் முயற்சி இடம்பெறுவதாக கூறப்படுகிற விடயம் பற்றி விசாரணை நடத்தப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பொலிசாருக்கு இதுபற்றிய சுயாதீன விசாரணை நடத்தும்படி கோரியுள்ளார்.

விசாரணை முடிந்த பின் அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் எம்.பி, மேற்படி மணல் கொள்ளை பற்றி குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like