21ஆம் திகதி அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகின்ற 21ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணமாகின்றார்.

ஐ.நா 76ஆவது பொதுச்சபைக் கூட்டம் நிவ்யோர்க்கில் நடக்கவுள்ளது.

இதில் கலந்துகொள்ளவே அவர் அமெரிக்கா செல்கின்றார்.

இலங்கை ஜனாதிபதியாக தெரிவான நாளிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொள்கின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிலுள்ள தனது மருமகளுக்குப் பிறந்துள்ள பேத்தியையும் பார்ப்பதற்காக அவர் செல்லவுள்ளார் என்று கூறப்படுகின்றது.

You May also like