16ஆம் திகதி ஆளுநராகிறார் கப்ரால்-சிறப்பு வர்த்தமானி தயார்

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்று அல்லது ஓரிரு தினங்களில் தற்போதைய வங்கி ஆளுநர் பதவியிலுள்ள டபிள்யூ. டி லக்ஷ்மன் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து கப்ரால் ஆகியோர் பதவிகளை இராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று அஜித் நிவாட் கப்ராலுக்காகத் தயாராகி வருகின்றது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதாயின் கப்ரால் சில நிபந்தனைகளை விதித்திருந்தார்.

அதன்படி மத்திய வங்கியின் ஆளுநராக தாம் பொறுப்பேற்றால், அமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரங்கள், வரப்பிரசாதங்களையும் அவர் கேட்டிருந்தார்.

இவற்றை வழங்குவதற்காகவே தற்போது விசேட வர்த்தமானி அறிவிப்பு தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like