சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா-மருத்துவமனையில் அனுமதி

இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் நேற்று இரவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளர் ஒருவருடன் நேரடியாக நெருக்கமாகியிருந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவிட்டிற்கு எதிராக இரண்டு டோஸ்களையும் பெற்றிருக்கின்ற இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு தற்போது 78 வயது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like