கட்சித்தாவல் – சஜித்திடம் இருந்து விரைவில் 10 பேர் ரணில் வசம்?

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விரைவில் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாக அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி 10 பேர் இவ்வாறு கட்சித்தாவலுக்குத் தயாராகவிருப்பதாகவே எமது Tamil.truenews.lk செய்தி இணையத்தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

அண்மைய நாட்களாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் செயற்பாடுகள் குறித்து இவர்கள் அதிருப்தி கண்டுள்ளனர்.

சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்திலிருக்கின்ற பெண் உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் இருவரது ஆலோசனைக்கமைய செயற்படுவதாக கட்சித்தாகவிருக்கின்ற உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இவ்வாறு கட்சித்தாவலுக்குத் தயாராக உள்ளவர்கள் பற்றிய தகவல் அடுத்துவரும் நாட்களில் எமது இணையத்தளம் ஊடாக அம்பலப்படுத்தும்வரை பொறுமையாக இருங்கள் வாசகர்களே…

You May also like