போதைப்பொருள் நிறைந்த படகுடன் 9 பேர் கைது

இலங்கைக்கு ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுவந்த வெளிநாட்டு படகொன்றை பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த படகில் பயணித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு (10) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மட்டக்களப்பு பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கடற்படை இணைந்து நடத்திய சுற்றி வளைப்பிலேயே, இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் வசம் இருப்பின், 1997 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரியுள்ளார்.

You May also like