தலிபான்களுக்கு எதிரான அறிவிப்பை வெளியிட்டார் கொழும்பு தூதுவர்

ஆப்கானில் தலிபான்களால் அமைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அமைச்சரவையை ஏற்க முடியாதென கொழும்பில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதவர் அஷ்ரப் ஹய்தாரி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கடிதமொன்றை இலங்கை அரசாங்கத்திற்கும் அதேபோல கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகில் உள்ள ஆப்கான் தூதரகங்கள் எதுவும் இந்த இடைக்கால அமைச்சரவையை ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஆப்கானில் ஆட்சியமைத்துள்ள தலிபான்களின் ஆட்சியை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like