பைசர் இன்றி தடுப்பூசி போடாமல் திரும்புவோர் வீதம் அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் பைசர் தடுப்பூசி இல்லாத பட்சத்தில் ஏனைய தடுப்பூசியை பெற மனதில்லாமல் 20 தொடக்கம் 30 வயது வரையானவர்கள் பலரும் திரும்புவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபை பிரதான மருத்துவர் ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.

தாம் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட இவ்வாறு தடுப்பூசி பெறாமல் திரும்புவோர்
30 வீதமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பைசர் தடுப்பூசி அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு அனுப்பிவைக்க அரசாங்கமே தனக்கு அறிவித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாகடர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

You May also like