கோவிட் குழுவிலிருந்து மேலும் சில மருத்துவர்கள் வெளிநடப்பு?

கோவிட் தொழில்நுட்ப குழுவிலிருந்து மேலும் சில மருத்துவ நிபுணர்கள் வெளியேறவிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவிக்கிறது.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப் பெறாமல், அரசியல் ரீதியிலான முடிவுகள் அங்கு எடுக்கப்படுவதாகவும் அதனால் தொழிற்துறை என்பதை பாதுகாத்துக் கொள்வதற்காக குழுவிலிருந்து விலக சிலர் முடிவெடுத்திருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் டாக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவிக்கின்றார்.

இதேவேளை குறித்த குழுவிலிருந்து இரண்டு மருத்துவ விசேட நிபுணர்கள் இதுவரை வெளியேறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like