இத்தாலியில் மஹிந்த- இலங்கையர்கள் நாளை அங்கு ஆர்ப்பாட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் பிரதமர் மஹிந்த பங்கேற்கின்ற நிகழ்வு இடம்பெறவுள்ள இத்தாலியின் பொலஞ்ஜா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நாளை மாலை 03 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கின்ற பிரதான சூத்திரதாரிகளை கைது செய்யம்படி வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

You May also like