இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று (12) நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல் பயிற்சி பரிசோதனைகளை நேற்று மாலை எதிர்கொண்ட நிலையில், அவருக்கு சாதகமான பெறுபேறு கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையில், இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா விளையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.