மேசையில் தலைசாய்த்தவாறு உயிரிழந்த பெந்தோட்டை பொலிஸ் அதிகாரி

பணிசெய்யும் இடத்தில் தனது மேசையில் தலையை சாய்ந்த வண்ணமே பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் களுத்துறை – பெந்தோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரான 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார். இவர் காலி – பலப்பிட்டிய, காத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

போக்குவரத்துப் பிரிவில் இவர் கடமையாற்றிய நிலையில் இரவு வேளையில் கடமைக்குச் சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிய பின், மேசையில் தலையை சாய்த்தவாறு இருந்துள்ளார்.

அதிகாரிகள் அவர் தூங்கிக்கொண்டிருப்பதாகவே நினைத்த போதிலும் நீண்டநேரத்திற்குப் பின்னர் அவரை நெருங்கிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்தது.

குறித்த பொலிஸ் அதிகாரி அவ்விடத்திலேயே மரணித்திருக்கின்றார்.

எனினும் இவரது மரணத்திற்கு கொரோனா தொற்று காரணமா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

You May also like