கொழும்பு மருத்துவமனையில் குண்டு மீட்பு-மக்கள் பதற்றம்

கொழும்பு – நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா ஹொஸ்பிட்டில் வளாகத்தின் வாகனத் தரிப்பிட மலசல கூடத்தில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து சோதனை நடத்தி கைக்குண்டை மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி. காட்சிகளை சோதனை செய்து பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May also like